9 ஆண்டுகள் கள்ளக்காதல்… பெண் அழகு கலை நிபுணர் கழுத்தறுத்து கொலை.. கேரளாவை உலுக்கிய கொடூர சம்பவம்!!
Author: Babu Lakshmanan18 May 2023, 7:46 pm
கேரளா மாநிலம் காசர்கோட்டில் தனியார் விடுதியில் பெண் அழகு கலை நிபுணர் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள உடுமாபாரா என்னும் பகுதியை சார்ந்தவர் 34 வயதான அழகு கலை நிபுணரான தேவிகா. இவருக்கு திருமணம் ஆகி கணவனும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். அதுபோல, காசர்கோடு மாவட்டத்தில் உள்ள போவிக்கானம் என்னும் பகுதியை சார்ந்தவர் சதீஷ். இவருக்கும் திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில் கடந்த செவ்வாய் கிழமை மதியம் 2 மணி அளவில் காதலியான தேவிகாவை கழுத்தை அறுத்து கொலை செய்ததாக காதலன் சதீஷ் ஆவூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இதைக் கேட்டு போலீசாரே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த செவ்வாய் கிழமை அன்று காஞ்ஞங்காடு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் ஒன்றில் சந்தித்த இருவரும் அறையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக காதலன் சதீஷ் தேவிகாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
பின்பு காவல் நிலையத்தில் சென்று தான் கொலை செய்ததாகவும் சரணடைந்தார். தொடர்ந்து, போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் சதீஷ்க்கும் திருமணம் ஆனதும், அதுபோல தேவிகாவுக்கு திருமணமானதும் தெரியவந்துள்ளது. அதுபோல இருவரும் ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக தகாத உறவில் இருந்து வந்ததும் தெரியவந்தது.
இதனிடையே, தான் சதீஷின் குழந்தையை பார்த்த பிடித்துப் போன தேவிகா – சதீஷிடம் அவரது மகளை தனக்கு தந்துவிட கேட்டு தொடர்ந்து நச்சரித்து வந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அவ்வப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதமும் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், தான் இருவரும் தனியார் விடுதியில் சந்தித்துக் கொண்ட பின்பு குழந்தையை வேண்டும் என மீண்டும் அடம்பிடிக்க தொடங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் சதீஷ் பொறுமை இழந்து அறையில் இருந்த கத்தியை எடுத்து, அவரது கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். தன்னை வாழ விடவில்லை தனது குழந்தையை கேட்டு தொடர்ந்து நச்சரித்து வந்துள்ளார். அதை தாங்க முடியாமல் தான் கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தொடர்ந்து தனியார் விடுதியில் சென்று ஆய்வு செய்த போலீசார் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், காதலன் சதீஷை கைது செய்து சிறையில் அடைத்ததுடன் இதுவரை குறித்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.
தகாத உறவால் நாளுக்கு நாள் கேரளாவில் தொடரும் கொலையின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.