Amazon பார்சலில் வந்த விஷ பாம்பு.. ஆர்டர் செய்த பொருளை திறந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

Author: Vignesh
19 June 2024, 4:43 pm

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் அனேகல், சர்ஜாபுரா பகுதியை சேர்ந்தவர் தான்வி. இவர் அமேசான் ஆன்லைன் ஷாப்பிங் இயங்குதளம் வாயிலாக Xbox Controller ஆர்டர் செய்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு டெலிவரி ஊழியர் ஆர்டர் செய்த பொருளை வழங்கி இருக்கிறார்.

ஆசையாக ஆர்டர் செய்த பொருளை வாங்கி பிரித்துப் பார்த்த தான்விக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி. அதாவது, பார்சலில் இருந்து குட்டி பாம்பு ஒன்று எட்டிப் பார்த்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். இந்த அதிர்ச்சி தரும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

இதை அடுத்து, சம்பவம் தொடர்பாக அமேசான் நிறுவனம் விசாரணை நடத்தி வருகிறது. மேலும், பாம்பு எப்படி பார்சலில் வைத்து அனுப்பப்பட்டது என்ற சர்ச்சை கேள்வியும் எழுந்து இருக்கிறது. முன்னதாக அமேசான் உட்பட ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் பொருட்களை ஆர்டர் செய்தால் விலை உயர்ந்த பொருட்களுக்கு பதில் செங்கல் வைத்து அனுப்பிய சம்பவம் சமீப காலமாக அரங்கேறி வந்தது. தற்போது, பாம்பு வைத்து அனுப்பப்பட்டுள்ள இந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது அமேசான் போன்ற பிற ஆன்லைன் ஷாப்பிங் மீதான பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மைக்கு கேள்விக்குறியை ஏற்படுத்தி இருக்கிறது.

  • Pushpa 2 vs Mufasa collection புஷ்பா2-க்கே பயம் காட்டிய முஃபாஸா…வசூலில் முரட்டு சாதனை..!
  • Views: - 299

    0

    0