சட்டசபையில் இப்படியா..? செக்ஸ் குறித்து ஆபாசமாக பேசிய முதலமைச்சர் ; முகம் சுழித்த பெண் எம்எல்ஏக்கள் ; அதிர்ச்சி வீடியோ…!!

Author: Babu Lakshmanan
8 November 2023, 10:29 am

மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது தொடர்பாக சட்டசபையில் முதலமைச்சர் ஆபாசமாக பேசிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் அண்மையில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான விபரங்களை அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் சட்டப்பேரவையில் வெளியிட்டார். அப்போது, மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது தொடர்பாக அவர் விளக்கமளித்தார். அப்போது, பெண்கள் குறித்து அவர் பேசிய பேச்சுக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கல்வி அறிவு பெற்றிருந்தால் பெண்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள மாட்டார்கள். கணவரின் செயல்பாடுகள் தான் அதிக குழந்தை பிறப்புக்கு காரணமாகிறது. எனினும், கல்வி அறிவின் மூலம் கணவரை கட்டுப்படுத்துவது எப்படி என்பது பெண்களுக்கு தெரியும், தற்போது பிறப்பு விகிதம் சரிந்து வருவதற்கு இதுவே காரணம் ஆகும், என நகைச்சுவை பாணியில் பேசினார்.

மேலும், உடலுறவு குறித்த சைகையை செய்தபடி அவர் சட்டசபையில் பேசியது பெண் எம்எல்ஏக்களை முகம் சுழிக்க வைத்தது. அதேவேளையில், அவரது கட்சி எம்.எல்.ஏக்கள் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் சிரித்தனர். முதலமைச்சர் நிதிஷ்குமாரின் இந்தப் பேச்சு எதிர்கட்சியினரிடையே கடும் எதிர்ப்புக்களை கிளப்பியது. நிதிஷ்குமாரின் இந்த பேச்சுக்கு முதல்வரின் பேச்சு மிகவும் கீழ்த்தரமானது என்று பாஜக சாடியுள்ளது.

  • actor rk said that he gave one crore advance to vadivelu வடிவேலுகிட்ட கோடி ரூபாய் கொடுத்தேன், ஆனால் அவரு? ஓபனாக போட்டுடைத்த பிரபல நடிகர்…