ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றும் என்ஜினியர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் பணமும், நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
பீகாரின் கிஷன்கன்ஜ் டிவிசனில் நிர்வாக பொறியாளராக இருப்பவர் சஞ்சய் குமார் ராய். இளநிலை பொறியாளரான இவர், அலுவலகத்தில் உள்ள காசாளர்களிடம் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார் சென்ற நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், பாட்னாவில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் கோடிக்கணக்கான மதிப்புள்ள கட்டுகட்டான பணமும், நகைகளும் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதோடு, பல சொத்து ஆவணங்களும் சிக்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். பணத்தை எண்ணுவதற்காக ரூபாய் நோட்டுகளை எண்ணும் இயந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சஞ்சய் குமார் ராய் தொடர்புடைய வீடுகளிலும் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரையில் ரூ.4 கோடி ரொக்கம் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷுடன் புதிய திரைப்படம் – அஸ்வத் உறுதி இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தனது வெற்றிப் படமான டிராகன் திரைப்படத்திற்குப் பிறகு…
‘ராபின்ஹுட்’ படத்தில் வார்னரின் சிறப்புத் தோற்றம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்,இந்திய ரசிகர்களிடையே அதிக ஆதரவு பெற்றுள்ள ஒரு…
இயக்குநர் பேரரசு திருப்பாச்சி படம் இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து சிவகாசி, திருப்பதி, திருவண்ணாமலை, பழனி, தர்மபுரி,…
உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு நேர்ந்த கொடுமை! இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்ரவர்த்தி,2021 டி20 உலகக் கோப்பைக்குப்…
பெருசு டைட்டில் படத்திற்கு சரியான தலைப்பு இயக்குனர் வைத்துள்ளார் என திருச்சியில் நடிகர் பாலசரவணன் கூறியுள்ளார். ஸ்டோன் பீச் பிலிம்ஸ்,…
தங்கக் கடத்தல் பின்னணியில் உள்ள சதி நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கியிருப்பது திரையுலகில் பெரும் பரபரப்பை…
This website uses cookies.