திடீரென சரிந்து விழுந்த பிரச்சார மேடை… அடுத்தடுத்து ஆட்டம் கண்ட ராகுல் காந்தி.. வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
27 May 2024, 9:05 pm

பீகாரில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் பங்கேற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தின்போது, மேடை திடீரென ஆட்டம் கண்டதால் சிறிது பரபரப்பு நிலவியது.

பீகார் மாநிலம் பாலிகஞ்ச் பகுதியில் இண்டியா கூட்டணி சார்பில் தேர்தல் பிரசாரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி மற்றும் மற்ற இண்டியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க: வெளியானது குரூப் 4 ஹால் டிக்கெட்.. எப்படி..? எங்கு பெறலாம் தெரியுமா…? முழு விபரம் இதோ!!

ராகுல் காந்தி மேடையில் ஏறி தொண்டர்களிடம் கையை அசைத்தவாறு நடந்து சென்ற போது, திடீரென மேடையின் ஒரு பகுதி உடைந்தது. இதையடுத்து, மேடை சிறிதளவு கீழே சரிந்தது. இதில், மேடை ஆட்டம் கண்டதால், ராகுல் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் தடுமாறினர்.

உடனே சுதாரித்துக்கொண்ட மற்றவர்கள் ராகுலை தாங்கிப்பிடித்தனர். நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி