தோட்டத்தில் விளையாடிய சிறுவர்களை துப்பாக்கியால் சுட முயற்சி : அமைச்சரின் மகனுக்கு தர்ம அடி!!

Author: kavin kumar
24 January 2022, 9:49 pm

பீகார் மாநில அமைச்சரின் மகன் தனக்கு சொந்தமான நிலத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை பயமுறுத்துவதற்காக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பீகார் மாநிலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சராக இருப்பவர் நாராயண் பிரசாத். இவரது மகன் பப்லு பிரசாத். இந்த நிலையில் பீகாரின் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் உள்ள ஹர்டியா கிராமத்தில் நாராயண் பிரசாத்துக்கு சொந்தமான நிலத்தில் சிறுவர்கள், குழந்தைகள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர்.இதனை பார்த்த அமைச்சரின் மகன் பப்லு பிரசாத் ஆத்திரம் அடைந்தார். அங்கு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை இங்கு இருந்து செல்லும்படி அவர் எச்சரிக்கை விடுத்தார்.

அவர் சிறுவர்களிடம் கடுமையாக பேசியதால் சிறுவர்களுக்கும், அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அமைச்சரின் மகன் உள்ளூர்வாசிகள் சிலரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து அங்கு விளையாடிய குழந்தைகளை பயமுறுத்துவதற்காக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் சிலர் காயம் அடைந்தனர் எனவும் தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், அமைச்சர் நாராயண் பிரசாத் வீட்டுக்குச் சென்று, அவரது காரை அடித்து நொறுக்கினார்கள். அவரது மகன் பப்லுவை சரமாரியாக தாக்கினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!