15 கி.மீ.க்கு ஓடும் ரயிலின் ஜன்னலில் தொங்கவிடப்பட்ட இளைஞர்… எதற்காக தெரியுமா..? வைரலாகும் ஷாக் வீடியோ..!!

Author: Babu Lakshmanan
15 September 2022, 6:09 pm

பீகார் : பீகாரில் இளைஞர் ஒருவரை ஓடும் ரயிலின் ஜன்னலில் 15 கி.மீ. தொங்கவிட்டபடி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் சமஸ்திபூர் – கட்டிஹார் பயணிகள் ரயிலில் ஏராளாமானோர் பயணம் செய்து கொண்டிருந்தனர். பெகுஷாராய் பகுதியில் உள்ள நிறுத்தத்தில் இருந்து ரயில் புறப்படும் போது, பயணி ஒருவரின் செல்போனை திருடன் பறித்துச் செல்ல முயன்றுள்ளார்.

அப்போது, அந்த நபரை கையும் களவுமாக பிடித்த பயணிகள், ஓடும் ரயிலில் ஜன்னலுக்கு வெளியே தொங்கவிட்டபடி, அந்த நபரை சுமார் 15 கி.மீ.க்கு ஆபத்தான முறையில் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், அங்குள்ள காவல்நிலையம் ஒன்றில் அந்த நபரை ஒப்படைத்துள்ளனர்.

இதனிடையே, ஒடும் ரயிலின் ஜன்னலில் அந்த நபரை தொங்கவிட்டபடி செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அந்த நபர் வலி தாங்க முடியாமல், கெஞ்சும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…