கட்டுப்பாட்டை இழந்த பைக்.. பேருந்து சக்கரத்தில் சிக்கி கோர விபத்து… 2பேர் பலி : நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
8 July 2022, 2:08 pm

ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டம் கதிரி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கர்நாடக அரசு பேருந்து மீது மோதியதில் பைக்கில் பயணித்த 2 பேர் உயிரிழந்தனர்.

விபத்து நடைபெற்ற போது அரசு பேருந்து மீது மோதிய மோட்டார் சைக்கிள் பேருந்தின் அடியில் சிக்கி கொண்டது. எனவே அதில் பயணித்த இரண்டு பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மரணமடைந்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் மூலகலச்செருவு மண்டலம் கோனேடிவாரி பள்ளியை சேர்ந்த கிருஷ்ணப்பா (வயது 45) மற்றும் நீர்கட்டிப்பள்ளியைச் சேர்ந்த ஆனந்த் (வயது 27) என அடையாளம் காணப்பட்டுள்ளது.

https://vimeo.com/728053471

விபத்து பற்றி தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதனப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?