நண்பன் மனைவியின் சிகிச்சைக்காக திருடி சம்பாதித்த பணத்தை செலவு செய்த பைக் திருடன் : ஷாக் சம்பவம்!

Author: Udayachandran RadhaKrishnan
24 July 2024, 8:40 pm

பெங்களூரு நகரில் ஆப்பிள் என்றழைக்கப்படும் அசோக் மார்கெட் பகுதியில் பழ வியாபாரம் செய்து வந்த நிலையில் எளிதாக பணம் சம்பாதிக்க கெட்ட நண்பர்களின் பழக்கம் காரணமாக பைக் திருடனாக மாறினார்.

அசோக் கேடிஎம் பல்சர் போன்ற உயர் ரக பைக்குகளை குறிவைத்து நகரின் பல்வேறு இடங்களில் திருடி வருவதை வாடிக்கையாக கொண்டவர். இவர் மீது தற்பொழுது பெங்களூரு நகரில் பல காவல் நிலையங்களில் 15 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இவரது குற்ற நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளாத இவரது மனைவி சில மாதங்களுக்கு முன்பு இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். சமீபத்தில் பெங்களூரு கிரி நகரில் உள்ள சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவரிடம் இருந்து அசோக்கும், அவரது கூட்டாளி சதீஷும் சேர்ந்து பைக்கை திருடியுள்ளனர்.

இந்த வழக்கை காவல்துறை விசாரித்த போது சதீஷ் மீது பெங்களூரு நகரில் கொலை, கொள்ளை என 40 வழக்குகள் உள்ளது தெரியவந்துள்ளது. மேலும் அசோக் ஒரு மாதத்திற்கு முன்பு தான் சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்துள்ளார்.

மேலும் விசாரணையில், அசோக் பைக் திருட்டில் சம்பாதித்த பணத்தை மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது நண்பரின் மனைவியின் சிகிச்சைக்காக பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. அசோக் மனைவி அவரை விட்டுப் பிரிந்தபோது மன உளைச்சலில் இருந்த அவரை அந்தத் தம்பதிகள் தாய் தந்தையைப் போல் பார்த்துக் கொண்டுள்ளனர்.

அந்த நன்றி உணர்ச்சிக்காக அசோக் தான் கொள்ளையடிக்கும் அனைத்து பணத்தையும் அவரின் புற்றுநோய் சிகிச்சைக்காக செலவு செய்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த செய்தி பெங்களூரு போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 264

    0

    0