ஏய், எப்புறா… சாலையில் சென்ற பைக்குகள் தானாகவே சறுக்கி விழுந்து விபத்து ; அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்!!

Author: Babu Lakshmanan
7 April 2023, 4:42 pm

கேரளாவில் வரிசையாக சாலையில் சறுக்கி விழுந்து காயம் அடைந்த இருசக்கர வாகன ஓட்டிகளின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பாலுசேரி என்னும் நகர பகுதியை இணைக்கும் கக்கோடி கிராம சாலை ஒரு சில தினங்களுக்கு முன்பாக தான் புதிதாக சீரமைத்துள்ளனர்.

இந்த நிலையில் அந்த பகுதியில் மழை பெய்து வந்துள்ளது. மழையின் போது அந்த சாலை வழியாக பயணிக்கும் பலரும் இருசக்கர வாகனங்களில் இருந்து சறுக்கி சாலையில் விழுந்து காயங்கள் அடைந்துள்ளனர். தொடர்ச்சியாக மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த மூவர் ஒரே சமயத்தில் சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

சாலையில் சறுக்கி விழும் காட்சிகள் முன்னால் சென்று கொண்டிருந்த பேருந்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • santhanu reply to a fan that comment on vijay sethupathiவிஜய் சேதுபதியை திட்டிய ரசிகருக்கு பதிலடி கொடுத்த சாந்தனு! அப்படி என்னதான் நடந்தது?