நேற்று ஒரே நாளில் கோடி கோடியாக குவிந்த காணிக்கை : தலைசுற்ற வைத்த திருப்பதி ஏழுமலையான கோவில் வசூல்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 February 2022, 10:50 am

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ஒருநாள் உண்டியல் காணிக்கை வருமானத்தை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாடு காலத்தை தொடர்ந்து கடந்த சில நாட்களாக ஏழுமலையானை தரிசிக்க தினமும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

இதனால் கடந்த மூன்றாண்டுகளுக்கு பின் திருப்பதி,திருமலை ஆகிய ஊர்கள் பக்தர்கள் வருகை காரணமாக மீண்டும் களைகட்ட துவங்கி உள்ளன.

இந்த நிலையில் நேற்று 56,559 பக்தர்கள் ஏழுமலையானை வழிபட்டு கோவில் உண்டியலில் 5 கோடியே 41 லட்சம் ரூபாயை ஏழுமலையானுக்கு காணிக்கையாக சமர்ப்பித்தனர். மேலும் 22,751 பக்தர்கள் தலைமுடி சமர்பித்து மொட்டை போட்டு கொண்டனர்.

கடந்த மூன்று ஆண்டுகளில் ஏழுமலையானுக்கு கிடைத்த ஒருநாள் உண்டியல் காணிக்கை வருமானத்தில் நேற்றைய காணிக்கை வருமானம் அதிக தொகை கொண்டதாக அமைந்துள்ளது.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!