கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் கோடி கோடியாக காணிக்கை : தலை சுற்ற வைத்த திருப்பதி கோவிலின் ஒரு மாத வருமானம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
4 March 2022, 10:39 pm

திருப்பதி : கடந்த பிப்ரவரி மாதம் திருப்பதி ஏழுமலையான் உண்டியல் காணிக்கை வருமானத்தை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகளில் பெருமளவு தளர்வுகள் கொண்டுவரப்பட்டு தற்போது திருப்பதி மலைக்கு நாளொன்றுக்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 10 லட்சத்து 95 ஆயிரத்து 704 பக்தர்கள் ஏழுமலையானை வழிபட்டனர். அவர்கள் மூலம் 79 கோடியே 34 லட்சம் ரூபாய் ஏழுமலையானுக்கு காணிக்கை வருமானமாக கிடைத்தது.

மேலும் கடந்த மாதம் ஏழுமலையானுக்கு தலைமுடி சமர்ப்பித்து மொட்டை போட்டுக்கொண்ட பக்தர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்து 35 ஆயிரம் ஆக உள்ளது. கடந்த மாதம் பக்தர்கள் 64 லட்சத்து 90 ஆயிரம் லட்டுகளை பக்தர்கள் வாங்கி சென்றுள்ளனர்.

  • Joshua Sridhar music journey இதெல்லாம் ஒரு இசையா…காது கொடுத்து கேட்க முடியல…பிரபல இசையமைப்பாளர் கொந்தளிப்பு..!
  • Views: - 1316

    0

    0