லக்னோவுக்கு சென்ற உ.பி முதல்வர் யோகி ஹெலிகாப்டர் மீது மோதிய பறவை : அவசர அவசரமாக தரையிறக்கம்!! (வீடியோ)

Author: Udayachandran RadhaKrishnan
26 June 2022, 12:02 pm

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சென்ற ஹெலிகாப்டர் மீது பறவை மோதியதால்,வாரணாசியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

வாரணாசியில் உள்ள ரிசர்வ் போலீஸ் லைன்ஸ் மைதானத்தில் இருந்து லக்னோ நோக்கி ஹெலிகாப்டர் புறப்பட்டபோது இந்த சம்பவம் நடந்துள்ளது அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உபி முதல்வர் யோகி சனிக்கிழமை வாரணாசிக்கு வந்து காசி விஸ்வநாதர் கோயிலில் தரிசனம் செய்தார். அதன்பின்னர், வளர்ச்சிப் பணிகள் மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

வாரணாசியில் இரவு தங்கிவிட்டு,இன்று காலை லக்னோவுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்.அப்போது முதல்வரின் ஹெலிகாப்டரை ஒரு பறவை மோதியது.அதன் பிறகு தரையிறங்க வேண்டியிருந்தது என்று தெரிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து,முதல்வர் யோகி அவர் அரசு விமானம் மூலம் லக்னோ புறப்படுகிறார் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!