14வது குடியரசு துணைத்தலைவராக பாஜக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் தேர்வு : அதிக வாக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி!!

Author: Udayachandran RadhaKrishnan
6 August 2022, 8:05 pm

நாட்டின் 14-வது துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் 10ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. அடுத்த துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடந்தது.

வாக்குப்பதிவு காலை 10 மணிக்குத் தொடங்கி 5 மணிக்கு நிறைவடைந்தது.
மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

இந்த தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மேற்கு வங்காள முன்னாள் ஆளுநர் ஜெகதீப் தன்கர் (71), எதிர்க்கட்சிகளின் சார்பில் மார்கரெட் ஆல்வா (80) ஆகியோர் போட்டியிட்டனர்.

மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் சேர்ந்து 780 எம்.பி.க்கள் உள்ளனர். இதில், 725 பேர் வாக்களித்தனர்.

92.9 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. பதிவான வாக்குகளில் 528 வாக்குகள் பெற்று ஜெகதீப் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மார்கரெட் ஆல்வா வெறும் 182 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

இதையடுத்து நாட்டின் 14வது புதிய துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் தேர்வு செய்யப்பட்டார்.

  • Salman Khan Net Worth Releasedதலையே சுத்துது… சல்மான் கான் சொத்து மதிப்பு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!
  • Views: - 675

    0

    0