195 தொகுதிகளின் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் ரிலீஸ்.. வாரணாசியில் மீண்டும் பிரதமர் மோடி..!!!

Author: Udayachandran RadhaKrishnan
2 March 2024, 7:24 pm

195 தொகுதிகளின் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் ரிலீஸ்.. வாரணாசியில் மீண்டும் பிரதமர் மோடி..!!!

விரைவில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு பாஜக தயாராக உள்ளது. இந்நிலையில், 195 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில், வாரணாசியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடுகிறார்.

குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் மத்திய அமைச்சர் அமித்ஷா போட்டி

போர்பந்தரில் மத்திய சுகாதார அமைச்சர் மான்சுக் மாண்டவியா போட்டி

கேரளா திருச்சூர் தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபி போட்டி

திருவனந்தபுரம் தொகுதியில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் போட்டி

கேரளா ஆட்டிங்கால் தொகுதியில் மத்திய அமைச்சர் முரளீதரன் போட்டி

அருணாச்சல பிரதேசம் மேற்கு தொகுதியில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ போட்டி

மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் விதிஷா தொகுதியில் போட்டி

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மத்திய பிரதேச மாநிலம் குனா தொகுதியில் போட்டி

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!