முதலமைச்சர் சந்திரசேகர ராவை தோற்கடித்த பாஜக வேட்பாளர்.. ரேவந்த் ரெட்டியும் தோல்வி : தெலங்கானாவில் ட்விஸ்ட்!
Author: Udayachandran RadhaKrishnan3 December 2023, 6:54 pm
முதலமைச்சர் சந்திரசேகர ராவை தோற்கடித்த பாஜக வேட்பாளர்.. ரேவந்த் ரெட்டியும் தோல்வி : தெலுங்கானாவில் ட்விஸ்ட்!
தெலுங்கானா சட்டசபை தேர்தலில் முதல்வர் சந்திரசேகர் ராவ் காமரெட்டி மற்றும் கஜ்வெல் தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் காமரெட்டி தொகுதியில் அவரை எதிர்த்து காங்கிரஸ் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி களமிறங்கினார். பாஜக சார்பில் வெங்கட ரமணா வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
இந்த தொகுதியில் தொடக்கம் முதலே சந்திரசேகர் ராவ் பின்னடைவை சந்தித்தார். ரேவந்த் ரெட்டி தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். ஆனால் இறுதிக்கட்டத்தில் டிரெண்ட் மாறியது. பாஜகவின் வெங்கட ரமணா வெற்றி பெற்றார். அதாவது பிஆர்எஸ் வேட்பாளரான சந்திரசேகர் ராவ் மற்றும் காங்கிரஸ் மாநில தலைவரும், காங்கிரஸின் முதல்வர் ரேஸில் முன்னனியி இருப்பவருமான ரேவந்த் ரெட்டியை வீழ்த்த வெங்கட ரமணா கெத்து காட்டியுள்ளார்.
இருப்பினும் ரேவந்த் ரெட்டி தனது 2வது தொகுதியான கோடங்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். மாறாக சந்திரசேகர் ராவ் தான் போட்டியிட்ட கஜ்வெல் தொகுதியில் முன்னிலையில் இருந்தாலும் கூட இன்னும் முடிவு அறிவிக்கப்படவில்லை. இதனால் சந்திரசேகர் ராவ் ஒரு தொகுதியிலாவது வெல்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.