பாஜக தலைவர் சுட்டுக்கொலை : பாஜக ஆளும் மாநிலத்தில் அதிர்ச்சி சம்பவம்.. ஷாக் சிசிடிவி காட்சி!

Author: Udayachandran RadhaKrishnan
11 August 2023, 3:55 pm

உத்தரபிரதேசத்தின் சம்பாலைச் சேர்ந்த 34 வயதான பாஜக தலைவர் அனுஜ் சவுத்ரி, டெல்லி சாலையில் அமைந்துள்ள மொராதாபாத்தின் பார்ஷ்வநாத் ஹவுசிங் சொசைட்டியில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே தனது சகோதரருடன் நடைபயணம் மேற்கொண்டிருந்தார்.

அப்போழுது, பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 3 நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து, சவுத்ரியின் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மொராதாபாத்தில் உள்ள பிரைட்ஸ்டார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சவுத்ரி இறந்த செய்தி பரவியதும், எஸ்எஸ்பி ஹேம்ராஜ் மீனா உட்பட அனைத்து போலீஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவரது உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிஸார், குற்றவாளிகளைத் தேடும் பணியை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை பிடிப்பதற்கு ஐந்து போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் அருகில் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Captain Vijayakanth first death anniversaryகேப்டன் விஜயகாந்த் நினைவு நாள்…கண் கலங்கிய சினிமா பிரபலங்கள்..!
  • Views: - 363

    0

    0