நடிகை டாப்ஸி மீது பாஜக எம்எல்ஏ மகன் பரபரப்பு புகார் : காவல் நிலையம் வரை சென்ற விவகாரம்!

Author: Udayachandran RadhaKrishnan
28 March 2023, 10:02 pm

தமிழ் , தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார் டாப்ஸி. அந்த வகையில் இந்தியில் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் ஜெயம் ரவியின் ‘ஜன கன மன’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்துள்ளதாக கூறப்படும் நிலையில் சில காரணங்களால் இன்னும் வெளியாகவில்லை.

சமீபத்தில் நடந்த ஒரு பேஷன் நிகழ்ச்சியில் டாப்ஸி கலந்து கொண்டார். அப்போது நடந்த அணிவகுப்பில் டாப்ஸி அணிந்து நடந்த உடையும் அவர் கழுத்தில் அணிந்திருந்த ஆபரணங்களும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் சிவப்பு நிற கவுனும் கடவுள் உருவம் பொறித்த நெக்லஸும் அணிந்திருந்தார்.

இது தொடர்பாக கவர்ச்சி உடையில் கடவுள் உருவம் பொறித்த நெக்லஸை டாப்ஸி எப்படி அணியலாம் என சிலர் கேள்வி கேட்டிருந்தனர். மேலும் இந்து கடவுள்களை அவமதிக்கும் விதமாக டாப்ஸியின் செயல் உள்ளதாக கூறி கண்டனங்களும் எழுந்தது.

இந்த நிலையில் மத்தியபிரதேசம் சாத்ரி புரா காவல் நிலையத்தில் டாப்ஸிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில், “லக்ஷ்மி தேவியுடன் கூடிய நெக்லஸை அணிந்து இந்து மத உணர்வை புண்படுத்தியுள்ளார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புகாரை மத்திய பிரதேசம் இந்தூர் தொகுதி பாஜக எம்.எல்.ஏ மாலினியின் மகன் ஏக்லவ்யா கவுர் கொடுத்துள்ளார்.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 470

    0

    0