ஒடிசாவில் முதன்முறையாக பாஜக ஆட்சி.. முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட மோகன் மஜி.. நாளை பதவியேற்பு!

Author: Udayachandran RadhaKrishnan
11 June 2024, 7:36 pm
Moh
Quick Share

நாடாளுமன்ற தேர்தலுடன் ஒடிசா சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் கடந்த 24 ஆண்டாக ஆட்சியில் இருந்த பிஜூ ஜனதா தளம் கட்சி படுதோல்வியை சந்தித்தது.

சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் பா.ஜ.க. அபார வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 147 சட்டசபை இடங்களில் 78 தொகுதிகளிலும், 21 பாராளுமன்ற தொகுதிகளில் 20 இடங்களையும் கைப்பற்றி அசத்தியது.

தற்போது மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டது. இதற்கிடையே, ஒடிசாவில் புதிய ஆட்சியை அமைக்கும் பணிகளை பா.ஜ.க. முடுக்கிவிட்டுள்ளது.

ஒடிசா மாநிலத்தின் புதிய முதல் மந்திரியை தேர்வு செய்வதற்கான பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடந்தது. இதில் சட்டசபை கட்சித்தலைவரை (முதலமைச்சர்) பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்தனர். இந்நிலையில், ஒடிசாவின் புதிய முதல் மந்திரியாக மோகன் சரண் மாஜியை தேர்வு செய்துள்ளனர்.

கனக் வர்தான் சிங் தியோ மற்றும் பிரவதி பரிதா ஆகியோர் துணை முதல் மந்திரிகளாக தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து, புதிய அரசின் பதவியேற்பு விழா நாளை நடக்கிறது.

மேலும் படிக்க: திமுக அமைச்சர் தூண்டுதலால் கொலை மிரட்டல்.. சொந்த கட்சி கவுன்சிலரின் உயிருக்கே ஆபத்து : பகீர் புகார்!

முன்னதாக, ஜெயதேவ் விகாரில் இருந்து பதவியேற்பு விழா நடைபெறும் மைதானம் வரை பிரதமர் மோடி வாகன பேரணி நடத்துகிறார். அப்போது அவர் மக்களுக்கு நன்றி தெரிவிப்பார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Views: - 103

0

0