பாஜக தனித்து போட்டி… அமித்ஷா அதிரடி அறிவிப்பு : பரபரப்பில் அரசியல் கட்சிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
31 December 2022, 6:23 pm

பாஜக தனித்து போட்டியிடும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நிர்வாகிகளிடையே பேசியுள்ளது அரசியல் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய மந்திரி அமித்ஷா கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் இணைந்து பா.ஜ.க. கூட்டணி அமைக்கப் போவதாக வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

கர்நாடகாவில் பா.ஜ.க. தனித்துப் போட்டியிடும். மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் கர்நாடாகாவில் ஆட்சி அமைக்கும் என்பதை நான் தெளிவாக கூற விரும்புகிறேன்.

காங்கிரஸைப் பொறுத்தவரை, அதிகாரத்தைப் பெறுவது ஊழல் செய்வதற்கான ஒரு வழியாகும். ஆனால் எங்களைப் பொறுத்தவரை அது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதாகும்.

சமீபத்தில் நடந்த 7 மாநில தேர்தல்களில் 5 மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. ஆனால் 6 மாநிலங்களில் காங்கிரஸ் சரிவை சந்தித்துள்ளது என குறிப்பிட்டார்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!