‘1984ல் நடந்தது நியாபகமிருக்கா..? அநேகமா, நீங்க காலி’…. தெலங்கானா முதலமைச்சருக்கு அண்ணாமலை கொடுத்த பதிலடி…!!

Author: Babu Lakshmanan
12 September 2022, 8:06 pm

தமிழகம் உள்பட தென்னிந்திய மாநிலங்களில் கால்பதிக்க தேவையான முயற்சிகளை பாஜக முயற்சி செய்து வருகிறது. அதேவேளையில், அந்தந்த மாநிலங்களில் அதனை கடுமையாக மாநில கட்சிகள் எதிர்த்து வருகின்றனர். குறிப்பாக, தமிழகத்தில் பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், திமுகவுக்கும் கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால், முதலமைச்சர் ஸ்டாலின் பாஜகவை வெளிப்படையாகவே விமர்சித்து வருகிறார்.

தமிழகம் போலவே, தெலங்கானாவில் ஆளும் டிஆர்எஸ் தலைவரும், முதலமைச்சருமான சந்திரசேகர ராவ் பாஜகவை எதிர்ப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். பாஜகவுக்கு எதிராக பல மாநில கட்சிகளை ஒன்று திரட்டும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்.

அண்மையில், சந்திரசேகர் ராவை விமர்சித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, விரைவில் தெலங்கானாவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என குறிப்பிட்டிருந்தார். மேலும், திமுகவில் உதயநிதியை அமைச்சராக்கும் பட்சத்தில் ஏக்நாத் சிண்டே வருவார், தமிழகத்தில் ஆட்சி கலையும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

Annamalai Request - Updatenews360

அண்ணாமலை தெலுங்கானா மற்றும் தமிழகம் குறித்து பேசியதற்கு தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் பதிலடி கொடுத்துள்ளார்.

ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க போவதாக பாஜக கூறுகிறது, ஏக்நாத் ஷிண்டே அரசியல்தான் உங்கள் அரசியலா? இதுதான் உங்களின் ஜனநாயகமா? தெலுங்கானாவில் 103 எம்எல்ஏக்கள் வைத்திருக்கிறோம், தோழமை கட்சிகளுடன் சேர்ந்து எங்களது எண்ணிக்கை 110 ஆக உள்ளது, எங்கள் ஆட்சியை கவிழ்ப்போம் என்று அண்ணாமலை பேசுகிறார். இதுதான் நீங்கள் அரசியல் நடத்தும் விதமா? தனது சொந்த தொகுதியில் கூட போட்டியிட்டு வெற்றிபெற முடியாத அண்ணாமலை, மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கவிழ்த்து விடுவோம் என மிரட்டுவதா?, என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

கேசிஆரின் இந்தப் பேச்சுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் விடுத்துள்ள பதிவில், கே.சி.ஆரின் குடும்ப ஆட்சியின் கொடுமையால் தெலுங்கானா மாநிலத்தில் நிலவி வரும் பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியிலும், சட்டப்பேரவையில் என்னைப் பற்றி நேரத்தை செலவிட்டுள்ளார்.

நான் கே.சி.ஆருக்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். நீங்களோ அல்லது தமிழக முதலமைச்சர் ஸ்டாலினோ, போட்டியிட்ட முதல் தேர்தலில் வெற்றி பெற்றீர்களா..?. தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது பெரிய விஷயமல்ல. நமது பணிகளால் மக்களின் நம்பிக்கையை பெறுவது முக்கியமானது.

அநேகமாக எங்கள் தெலுங்கானா சகோதர, சகோதரிகளின் நம்பிக்கையை நீங்கள் முழுவதுமாக இழந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதோடு, தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின், 1984ல் முதல்முறையாக ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த காணொளி ஒன்றையும் அண்ணாமலை பதிவிட்டு, திமுகவையும் பங்கம் செய்துள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ