எதிர்க்கட்சி தலைவர்களை கட்சியில் இணைக்க பாஜக மிரட்டல் : எதிராக போராட தயாரா இருங்க.. சோனியா காந்தி!

Author: Udayachandran RadhaKrishnan
6 April 2024, 4:32 pm

எதிர்க்கட்சி தலைவர்களை கட்சியில் இணைக்க பாஜக மிரட்டல் : எதிராக போராட தயாரா இருங்க.. சோனியா காந்தி!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சோனியா பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளில் வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், சமத்துவமின்மை ஆகியவற்றை மத்திய அரசு ஊக்கப்படுத்தியது. ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது. அரசியல் சாசனத்தை மாற்ற சதி நடக்கிறது.

நாட்டையும், ஜனநாயகத்தையும் பிரதமர் மோடி அழித்து வருகிறார். எதிர்க்கட்சி தலைவர்களை மிரட்டி, அவர்களை கட்சியில் சேர்க்க அனைத்து யுத்திகளையும் பா.ஜ.க, பயன்படுத்துகிறது. அனைத்து இடங்களிலும் அநீதி என்ற இருள் நிலவுகிறது. இதற்கு எதிராக நாம் அனைவரும் போராட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

  • Shocking incident shared by shalini pandey உடை மாற்றும் அறையில் திடீரென நுழைந்த இயக்குனர்! அதிர்ந்துப்போன ஷாலினி பாண்டே…