பா.ஜக., ஒரு போதும் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றாது.. ஜம்முவில் விரைவில் தேர்தல் : மத்திய அமைச்சரின் அறிவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
5 May 2024, 7:25 pm

பா.ஜக., ஒரு போதும் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றாது.. ஜம்முவில் விரைவில் தேர்தல் : மத்திய அமைச்சரின் அறிவிப்பு!

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அளித்த பேட்டி: ராணுவம் பல முன்னேற்றங்களை கண்டுள்ளது. ராகுலை பாகிஸ்தான் தலைவர் புகழ்ந்து பேசியது கவலை அளிக்கிறது. நாங்கள் எங்களின் வாக்குறுதிகளை எப்போதும் நிறைவேற்றுகிறோம். லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும்.

இதில் பா.ஜ.க, 370 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியா கைப்பற்ற வேண்டிய அவசியமில்லை. மக்கள் தாங்களாகவே இந்தியாவுடன் சேர விரும்புகிறார்கள்.

இடஒதுக்கீடு ரத்து செய்யப்படாது. தேர்தல் ஆதாயத்திற்காக மக்களை காங்கிரஸ் தவறாக வழி நடத்துகிறது. பா.ஜக., ஒரு போதும் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றாது. ஜம்மு காஷ்மீரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

  • vijay famous dialogue what bro spoke by ajith in good bad ugly movie “வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ”… விஜய்யின் வசனத்தை பேசி சீண்டிப்பார்க்கும் அஜித்?