இழந்ததை மீட்க பாஜக போட்ட மாஸ்டர் பிளான் : 4 மத்திய அமைச்சர்களை நியமித்த மேலிடம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
20 February 2023, 9:12 am

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த முறை இழந்த 14 எம்.பி. தொகுதிகளில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற பா.ஜ.க. தீவிரம் காட்டி, உத்தி வகுக்கிறது. 4 மத்திய அமைச்சர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மக்களவைக்கு அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேர்தல் நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தத் தேர்தலில் வென்று தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியில் அமர்வதற்கான வியூகங்களை பா.ஜ.க. வகுத்து வருகிறது.

மேலும், தேர்தலுக்கான களப்பணிகளில், மத்தியில் ஆளும் பா.ஜ.க. இப்போதே தீவிரம் காட்டத்தொடங்கி விட்டது. நாட்டின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தின் 80 எம்.பி. தொகுதிகளில் பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றும் கட்சியே மத்தியில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உருவாகும் என்பதால் அந்த மாநிலத்தில் பா.ஜ.க. தனிக்கவனம் செலுத்த விரும்புகிறது.

கடந்த 2019 தேர்தலில் அங்கு 14 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி வாய்ப்பை இழந்தது. அந்த தொகுதிகள், பிஜ்னோர், அம்ரோஹா, மொரதாபாத், சம்பல், ரேபரேலி, கோசி, லால்கஞ்ச், ஜான்பூர், அம்பேத்கர்நகர், காசிப்பூர், சிரேவஸ்தி, மெயின்புரி, சஹாரன்பூர், நாஜினா ஆகும்.

பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் இவற்றில் ரேபரேலி தொகுதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வென்றதாகும்.

சமாஜ்வாடி கட்சி, மெயின்புரி, சம்பல் உள்ளிட்ட 5 தொகுதிகளில் வென்றது. பகுஜன் சமாஜ் கட்சி 10 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் இந்த மாநிலத்தில், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ராஷ்டிரிய லோக்தளம் கட்சிகள் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டன.
பா.ஜ.க., அப்னாதளத்துடன் இணைந்து போட்டியிட்டு 64 இடங்களைக் கைப்பற்றியது. ஆனால் இடைத்தேர்தல் மூலம் அசம்கார், ராம்பூர் தொகுதிகளை வென்றது.

இந்த நிலையில், கடந்த முறை வெற்றி பெறத்தவறிய 14 எம்.பி. தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெற தீவிரம் காட்டுகிறது. அதற்கான உத்தி வகுத்து வருகிறது.

இந்த தொகுதிகளில் உத்தி வகுத்து வெற்றி பெறுவதற்கான பொறுப்பு 4 மத்திய மந்திரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

  • ajith fans released poster on ilaiyaraaja compensation on good bad ugly viral on internet இசைஞானியே! இது தர்மமா? போஸ்டர் வெளியிட்டு புலம்பும் அஜித் ரசிகர்கள்! அடப்பாவமே…