வாக்கு இயந்திரத்தில் பாஜக பெயர்.. குவியும் புகார் : சைலண்ட் மோடில் தேர்தல் ஆணையம்.. அதிர்ச்சியில் ஆளுங்கட்சி!
Author: Udayachandran RadhaKrishnan25 May 2024, 5:02 pm
நாடாளுமன்ற 6ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8 மாநிலங்களில் மொத்தம் 58 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மேற்கு வங்கத்தில் 8 தொகுதியில் இன்று தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஓர் பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளது. இன்று, மேற்கு வங்க மாநிலம் பங்குராவில் ரகுநாத்பூர் பகுதி வாக்குச்சாவடியில் இன்று வாக்குப்பதிவுக்கு கொண்டுவரப்பட்ட 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பாஜக பெயர் அதில் டேக் போல கட்டி வைக்கப்பட்டு இருந்தது என புகைப்படத்துடன் திரிணாமுல் காங்கிரஸ் குற்றசாட்டை முன்வைத்துள்ளது.
இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் விதமாக தேர்தல் ஆணையம் சார்பில் பதிவிடுகையில், தேர்தல் பணியின் போது, வாக்கு இயந்திரத்தை சோதித்து பொதுவான ஓர் குறிச்சொற்களை வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்களால் கையொப்பமிட்டு வைப்பர்.
மேலும் படிக்க: முடிவுக்கு வந்த போக்குவரத்துத் துறை காவல்துறை மோதல்.. நடந்துநர் – காவலர் இடையே சமாதானம்.. வைரல் வீடியோ!
குறிப்பிட்ட வாக்கு இயந்திரங்களின் சோதனை நேரத்தில் பாஜக வேட்பாளரின் பிரதிநிதி மட்டுமே கமிஷன் ஹாலில் இருந்ததால், அந்த EVM மற்றும் VVPAT சோதிக்கும் போது அவரது கையெழுத்து பதிவாகியுள்ளது என மேற்கு வங்க தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.
0
0