2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான வேலையில் பாஜக போட்ட பலே திட்டம் : பல கோடி செலவில் உருவாகும் ஹாட்லைன்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 September 2022, 7:47 pm

வரும் 2024 லோக்சபா தேர்தலுக்கான அனைத்து வேலைகளும் இந்த இரண்டு மாடிகளில் உள்ள அறைகளில் தான் நடக்கப் போகிறதாம். இங்கு 543 லோக்சபா தொகுதிகளின் வரைபடங்கள் மாநில வாரியாக வைக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து ஒவ்வொரு மாவட்ட பா.ஜ.க., அலுவலகத்தையும் உடனடியாக தொடர்பு கொள்ளும் ‘ஹாட் லைன்’களும் தயாராகி வருகின்றன.

இந்தியா முழுக்க, 756 மாவட்டங்களில் இருக்கும் பா.ஜ.க தலைவர்களுடன் பிரதமர் மோடி உரையாட உள்ளாராம். நவம்பர் முதல் வாரத்தில் இந்த பிரத்யேகமான உரையாடல் இருக்கும்.

இதற்கான ஏற்பாடுகள் பா.ஜ.க, தேசிய அலுவலகத்தில் நடைபெற்று வருகின்றன. இதற்கு, பா.ஜ.க, தலைமை பல கோடி ரூபாய்களை செலவழித்துள்ளதாம்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…