பிரதமர் மோடி பயணித்த ஹெலிகாப்டர் அருகே பறந்த கருப்பு பலூன்கள் : பாதுகாப்பில் குளறுபடி.. கொந்தளித்த பாஜக..!!

Author: Udayachandran RadhaKrishnan
4 July 2022, 4:47 pm

ஆந்திரா : பிரதமரின் ஆந்திர பயணத்தின் போது பாதுகாப்பு குளறுபடி ஏற்படும் விதமாக காங்கிரசார் பறக்கவிட்ட கருப்பு பலூன்கள் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஹைதராபாத் சமீபத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் இரண்டு நாட்களாக கலந்து கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆந்திராவிற்கு வந்தார்.

விஜயவாடா அருகில் உள்ள கண்ணவரம் விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்த அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பீமவரம் சென்று அல்லூரி சீதாராமராஜூ பிறந்தநாள் விழாவில் பங்கேற்றார்.

கன்னவரம் விமான நிலையம் அருகில் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் பறக்கவிட்ட கருப்பு பலூன்கள் பிரதமர், ஆந்திர முதல்வர் ஆகியோர் பயணித்த ஹெலிகாப்டர் கான்வாய் பாதையில் சென்றது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த செயல் பிரதமரின் பாதுகாப்பு விஷயத்தில் நடத்தப்பட்ட பெரும் குளறுபடியாக கருதப்படுகிறது.
எனவே பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் இது பற்றி விசாரணை நடத்துவார்கள் என்று ஆந்திர பாஜக தலைவர் சோமுவீர ராஜு கூறியுள்ளார்.

  • Dragon Beat Vidaamuyarchi Movie Collection விடாமுயற்சி வசூலை விரட்டி முறியடித்த டிராகன்.. வெறும் 5 நாட்களில்..!!