பில்லி, சூனியத்தால் பீதி.. வயது முதிர்ந்த தம்பதி மீது கிராமத்தினருக்கு எழுந்த சந்தேகம் ; ஒரே இரவில் நடந்த கொடூரம்!!

Author: Babu Lakshmanan
17 January 2023, 3:55 pm

பில்லி, சூனியம் அச்சத்தால் கிராம மக்களுக்கு சந்தேகம் எழுந்த நிலையில், இரட்டை கொலை அரங்கேறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் சிந்தூர் மண்டலம் கல்லேறு ஊராட்சி ஸ்டாபோர்ட் பேட்டையை சேர்ந்த வயது முதிர்த்த தம்பதி மிதியம் லக்ஷ்மய்யா ( 54), மிதியம் சிங்கம்மா (52). ஆந்திரா – ஒடிசா மாநில எல்லையில் உள்ள கிராமத்தில் வசித்து வந்தனர். இவர்களின் வீடும் கிராமத்தின் ஒதுக்கு புறமாகவே இருந்துள்ளது.

மிதியம் லக்ஷமய்யா குடும்பத்தினருடன் பக்கத்து வீட்டுக்காரரான கோவை அப்பா ராவ் என்பவருடன் நிலத் தகராறு ஏற்பட்டு வந்தது. இதனிடையே, முதியோர் தம்பதி இருவரும் சூனியம் செய்வதாக கிராம மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு இரவில் இருவரும் தூங்கிக் கொண்டிருக்கும் போது, மர்ம நபர்கள் சிலர் உருட்டு கட்டைகளுடன் சென்று அவர்களுடைய வீட்டு கதவை தட்டினர். கதவை திறந்ததும் உள்ளே சென்ற அந்த கும்பல், மிதியம் லக்ஷ்மய்யா மற்றும் அவரது மனைவியை கொடூரமாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த தம்பதி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உயிரிழந்த பிறகும் அந்த கும்பல் தாக்குதலை நிறுத்தவில்லை. இதனால், இருவரின் உடலும் சிதைந்தன. நேற்று மாலை வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது, கணவன், மனைவி கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர், இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தம்பதியினர் சூனியம் வைப்பதாக நினைத்து அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • sv shekher shared the test movie poster and criticize it on his x platform என்னைய படத்தில் இருந்து தூக்கிட்டா இதான் கதி- நயன்தாரா படத்திற்கு எஸ்.வி.சேகர் விட்ட சாபம்…