BMW கார்… 15 ஏக்கர் நிலம்… 150 சவரன் நகை : அடுக்கிக் கொண்டே போன மணமகன் வீட்டார்.. இளம்பெண் மருத்துவருக்கு நேர்ந்த சோகம்!

Author: Udayachandran RadhaKrishnan
7 December 2023, 2:44 pm

BMW கார்… 15 ஏக்கர் நிலம்… 150 சவரன் நகை : அடுக்கிக் கொண்டே போன மணமகன் வீட்டார்.. இளம்பெண் மருத்துவருக்கு நேர்ந்த சோகம்!

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சை பிரிவில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார் 26 வயதான டாக்டர் ஷஹானா. இவரும் டாக்டர் ஈஏ ருவைஸும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது . இருவர் வீட்டிலும் இந்த விஷயம் தெரிந்து திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து வந்துள்ளனர்.

இளம்பெண் மருத்துவர் ஷஹானா தனது தயார் மற்றும் தனத 2 உடன்பிறப்புகளோடு வாழந்து வந்துள்ளார். தந்தை வெளிநாட்டில் வேலை செய்து வந்த நிலையில் கடந்த 2 ஆண்டுக்கு முன்னர் உயிரிழந்துவிட்டார். டாக்டர் ஈஏ ருவைஸ் வீட்டார், ஷஹானா வீட்டாரிடம் , 150 சவரன் தங்க நகை, 15 ஏக்கர் நிலம் ஒரு BMW கார் ஆகியவற்றை வரதட்சணையாக தர வேண்டும் என கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.

இதனை கொடுக்க இயலாது என பெண் வீட்டார் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின. அதனை அடுத்து இந்த திருமணம் நடைபெறாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பெண் மருத்துவர் ஷஹானா தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அவரது சடலத்தை மீட்கையில் அங்கு ஒரு கடிதத்தில், “அனைவருக்கும் பணம் மட்டுமே தேவை” என்று எழுதப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனை அடுத்து கேரள காவல்துறையினர், டாக்டர் ஈஏ ருவைஸ் மீது, தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் வரதட்சணை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். வரதட்சணையால் தற்கொலை செய்து கொண்ட டாக்டர் ஷஹானாவின் மரணம் குறித்த விசாரணையை தீவிரப்படுத்த அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 448

    0

    0