‘இது ஜோக் இல்ல…ஒரே நேரத்தில் 7 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்’…அவசர அவசரமாக வெளியேற்றப்பட்ட மாணவர்கள்: பெங்களூருவில் உச்சகட்ட பரபரப்பு..!!

Author: Rajesh
8 April 2022, 3:13 pm

கர்நாடகாவில் 7 பள்ளிகளுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மின்னஞ்சல் மூலமாக மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் வெளியேற்றப்பட்டு தீவிர சோதனை நடத்தப்படுகிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் செயல்பட்டு வரும் டெல்லி பப்ளிக் பள்ளி, வர்தூர்,கோபாலன் சர்வதேச பள்ளி, புதிய அகாடமி பள்ளி, செயின்ட் வின்சென்ட் பால் பள்ளி, இந்தியன் பப்ளிக் பள்ளி, கோவிந்த்புரா, எபினேசர் சர்வதேச பள்ளி, எலக்ட்ரானிக் சிட்டி ஆகிய 7 பள்ளிகளுக்கு இன்று காலை 11 மணியளவில் மின்னஞ்சல் ஒன்று வந்தது.

அதில், ‘மிகவும் சக்திவாய்ந்த வெடிகுண்டு உங்கள் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது. நன்றாக கேட்டுக் கொள்ளுங்கள். இது ஒன்றும் ஜோக் இல்லை. மிகவும் சக்தி வாய்ந்த வெடிகுண்டை உங்கள் பள்ளியில் வைத்துள்ளோம். உடனடியாக போலீசை கூப்பிடுங்கள். இல்லாவிட்டால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்படுவார்கள். தாமதம் செய்ய வேண்டாம். இதற்கு மேல் எல்லாம் உங்கள் கையில்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுடன் பள்ளி வளாகத்தை போலீசார் தீவிரமாக சோதனையிட்டனர். இதற்கு முன்பாக பள்ளி மாணவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

Bomb Threat in Bangalore Schools: ಶಾಂತಿ ಕದುಡುವ ಹುನ್ನಾರ ಎಂದ ಸಿಎಂ ಬೊಮ್ಮಾಯಿ

இதையடுத்து போலீஸ் குழுக்கள் மிக விரைவில் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனை நடத்தி வருவதாக காவல் ஆணையர் தெரிவித்தார். இதில் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. இதையடுத்து இந்த சம்பவம் ஒரு புரளி என போலீசார் தெரிவித்தனர்.

மின்னஞ்சல் எங்கே இருந்து அனுப்பப்பட்டது என்பதைக் கண்டறிய விசாரணையை போலீசார் தொடங்கி உள்ளனர். விரைவில் கூடுதல் தகவல்களைக் கண்டறிவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 1445

    0

    0