பிட்புல் நாய் இனங்களை வளர்க்க தடை…. ராட்வீலர் நாய்களுக்கும் கட்டுப்பாடு : மாநில அரசு அதிரடி உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
27 September 2022, 9:02 pm

பிட்புல் நாய் இன நாய்கள் சமீப காலமாக விலங்குகள் மற்றும் மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. உத்தரபிரதேசத்தின் கான்பூரில் உள்ள சர்சயா காட் பகுதியில் பிட்புல் நாய் ஒன்று பசுவை தாக்கும் வீடியோ சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

பசுவை தாக்கிய வெளிநாட்டு இனத்தை சேர்ந்த பயங்கரமான பிட்புல் நாய், மாநகராட்சியால் கைப்பற்றப்பட்டது. அதே போல் கடந்த ஜூலை மாதம் உத்தரபிரதேசத்தில் 82 வயது மூதாட்டியை பிட்புல் வகை நாய் கடித்து குதறியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில் கான்பூர் நகர எல்லைக்குள் பிட்புல் மற்றும் ராட்வீலர் இன நாய்களை வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கான்பூர் மேயர் பிரமிளா பாண்டே கூறுகையில், பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில், பிட்புல் மற்றும் ராட்வீலர் நாய்கள் நகர எல்லைக்குள் தடை செய்யப்பட்டுள்ளன.

சர்சையா காட் பகுதியில் பிட்புல் நாய் ஒன்று பசுவை தாக்கிய சம்பவத்துக்குப் பிறகு, பிட்புல் நாய்களின் தாக்குதல் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

  • வெட்கமே இல்ல? புது மருமகளை சக நடிகர்களுக்கு அறிமுகப்படுத்திய நாகார்ஜூனா!
  • Views: - 685

    0

    0