புதிதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலம்… திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு… அலறியடித்து ஓடிய வாகன ஓட்டிகள்.. ஷாக் வீடியோ!!

Author: Babu Lakshmanan
16 October 2023, 9:33 pm

புதிதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை – கோவா நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது பகதூர்ஷேக் நாகா எனும் பகுதி. இங்கு மக்கள் பயன்பாட்டிற்காக புதிய மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.

தூண் அமைக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில், மேம்பாலக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், திடீரென பாலம் உடைந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதைக் கண்ட அங்கிருந்த மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், அப்பகுதியில் இருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

Courtesy : PTI

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!