வெள்ளத்தில் அடித்து சென்ற பாலம்… ஆற்றை கடக்க முயன்ற இளைஞர் நீரில் அடித்து செல்லப்பட்ட சோகம் : ஷாக் வீடியோ!!!

Author: Udayachandran RadhaKrishnan
14 December 2022, 12:48 pm

திருப்பதி அருகே பெய்த மழை காரணமாக பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் ஆற்றை கடக்க முயன்ற வாலிபர் வெள்ளத்தில் தத்தளித்த காட்சிகள் வைரலாகி வருகிறது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள சோமலா கலிக்கிரி இடையே ஓடும் ஆற்றின் மீது போடப்பட்டிருந்த பாலம் சமீபத்தில் செய்த மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

இதனால் அந்த வழியாக பயணம் செய்யும் பயணிகள் வாகனங்களில் செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே ஆற்றில் ஒருபுறம் வரை வாகனத்தில் செல்லும் பயணிகள் வாகனத்தில் இருந்து இறங்கி ஆற்றை கடந்து மறுபுறம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று ஆற்றை கடந்து சென்ற வாலிபர் ஒருவர் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டார். அவரை அங்கிருந்த உள்ளூர் மக்கள் காப்பாற்றி கரை சேர்த்தனர். இது தொடர்பான கட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 461

    0

    0