நாற்காலியை காப்பாற்றிக்கொள்ள பட்ஜெட்.. நல்லா COPY PASTE செஞ்சிருக்காங்க : ராகுல் காந்தி கடும் விமர்சனம்!

Author: Udayachandran RadhaKrishnan
23 July 2024, 4:28 pm

இன்று நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதன்மூலம் அவர் தொடர்ந்து 7-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து சாதனை படைத்துள்ளார்.

காலை 11 மணிக்கு சபை கூடியதும் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்நிலையில், மத்திய பட்ஜெட் குறித்து காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் இந்த பட்ஜெட் நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதற்கான பட்ஜெட்டாகவே அமைந்துள்ளது. கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களை திருப்திப்படுத்தும் விதமாகவே பட்ஜெட் உள்ளது.

சாமானிய இந்தியர்கள் எந்தப் பலனும் இல்லாத வகையில் ஏஏ-வுக்கு (அம்பானி மற்றும் அதானி) பலன் தரும் விதமாக உள்ளது. காங்கிரசின் தேர்தல் அறிக்கை மற்றும் முந்தைய பட்ஜெட்டுகளை காப்பி அடித்துள்ளனர் என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க: பட்ஜெட் எதிரொலி.. சரிந்த தங்கம் விலை : மேலும் குறைய வாய்ப்பா? இதுதான் சரியான நேரம்!

மத்திய பட்ஜெட் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் கார்கே வெளியிட்டுள்ள செய்தியில், இது மோடி அரசை காப்பாற்றுவதற்கான பட்ஜெட், வேறு ஒன்றும் இல்லை என தெரிவித்துள்ளார்.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!