ஒரே ஒரு பேருந்தில் ஏற்பட்ட தீ.. ஒட்டுமொத்தமாக 9 பேருந்துகள் எரிந்து சாம்பல் : தீயணைப்பு துறையினரின் போராட்டம் தோல்வி!!!

Author: Udayachandran RadhaKrishnan
1 March 2022, 6:00 pm

ஆந்திரா : பிரகாசம் மாவட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டு தனியாருக்கு சொந்தமான 9 பேருந்துகள் எரிந்து நாசமானது.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோல் நகரில் மரக்கடை அருகே உள்ள மைதானத்தில் 20க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை திடீரென ஒரு பேருந்தில் தீ பற்றி எரிய ஆரம்பித்தது. தீ மளமளவென பரவி அடுத்தடுத்த பந்துகளில் பரவி ஒன்பது பேருந்துகள் முழுவதுமாக எரிந்து நாசமாகின.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்து வருகின்றனர். அப்பகுதியில் புகை மூட்டம் அதிகமாக உள்ளதால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Nayanthara Test movie news சிம்பு பிறந்த நாளுக்கு நயன்தாரா எடுக்க போகும் திடீர் முடிவு…ரசிகர்களுக்கு செம ட்விஸ்ட்..!