கண்ணாடி உரசியதால் ஏற்பட்ட மோதல்.. 1 கிலோ மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டு ஓட்டுனர் துடிக்க துடிக்க கொலை..!

Author: Vignesh
27 July 2024, 11:28 am

பெங்களூரில் இருந்து விஜயவாடா நோக்கி சென்ற இரண்டு தனியார் பேருந்து கண்ணாடிகள் உரசியால் டிரைவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

சித்தூர் அருகே டோல்கேட்டில் ஒரு பேருந்து டிரைவர் மற்றொரு பேருந்து முன்பு நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், அவர் மீது பேருந்து இயக்கி ஒரு கிலோமீட்டர் இழுத்துச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.

ஆந்திர மாநிலம் என் டி ஆர் மாவட்டம் விஜயவாடா அய்யப்பா நகர் என்மலக்கு வீதியை
சேர்ந்த சீனிவாசராவ் ஸ்ரீ கிருஷ்ணா டிராவல்ஸ் பஸ்சில் டிரைவராக பணி புரிந்து வருகிறார். இதேபோல் குண்டூர் மாவட்டம் செப்ரோலு மண்டலம் பழைய ரெட்டிபாலம் கிராமத்தை சேர்ந்த சுதாகர் ராஜு ஸ்ரீ கிருஷ்ணா டிராவல்ஸ் பஸ்சில் டிரைவராக பணி புரிந்து கடந்த ஒரு வாரம் முன்பு பொன்னூரில் குடிபெயர்ந்து மார்னிங் ஸ்டார் டிராவல்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்து டிரைவராக பணி புரிந்து வருகிறார்.

இந்த இரண்டு பஸ்களும் நேற்று இரவு பெங்களூரில் இருந்து விஜயவாடா நோக்கி புறப்பட்டது. ஆரம்பத்தில் இருந்து போட்டியிடும் ஓட்டி வந்த நிலையில், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பங்காருபாலம் அருகே இரண்டு பஸ்களின் சைடு கண்ணாடி உரைவு ஏற்பட்டது. இதனால் இரண்டு டிரைவர்களும் பஸ்சை ஓட்டி கொண்டே வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

அதே நேரத்தில் மகாசமுத்திரம் டோல்கேட் அருகே இரண்டு பஸ்களும் வெவ்வேறு லைனில் வந்த போது மார்னிங் ஸ்டார் டிரைவர் சுகாதகர் ராஜு கீழே இறங்கி ஸ்ரீ கிருஷ்ணா டிராவல்ஸ் பஸ் முன்பு நின்று வாக்குவாதம் செய்தார். இதனால், கோபமடைந்த டிரைவர் சீனிவாசராவ் பஸ்சை முன்னோக்கி ஓட்டி சென்றார்.

இதில், பஸ்சின் அடியில் சிக்கி கொண்டு சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டதில் மார்னிங் ஸ்டார் பஸ் டிரைவர் சுதாகர் ராஜு இறந்தார். டோல்கேட் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததால் போலீசார் பஸ்சை நிறுத்தி டிரைவர் சீனிவாசராவை கைது செய்தனர். ஸ்ரீகிருஷ்ணா டிராவல்ஸ் நிறுவனத்தினருடன் போலீசார் சி.சி.கேமிரா காட்சிகளின் ஆதாரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சித்தூர் மட்டுமின்றி ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • str 49 music composer is sai abhyankkar STR 49 பட இசையமைப்பாளரை அறிவித்து புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்த சிம்பு…