அமலான சிஏஏ சட்டம்.. 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் : மத்திய பாஜக அரசு மும்முரம்!

Author: Udayachandran RadhaKrishnan
15 May 2024, 8:00 pm

அமலான சிஏஏ சட்டம்.. 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் : மத்திய பாஜக அரசு மும்முரம்!

இந்தியாவில் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா 2019ல் அறிமுகம் செய்யப்பட்டது. இம்மசோதா பார்லிமென்டின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலும் பெறப்பட்டது.

கடந்த மார்ச் 11ம் தேதி அமலுக்கு வந்தது. இதன்படி, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு கடந்த 2014 டிசம்பர் 31ம் தேதிக்கு முன்பு இந்தியாவில் தஞ்சமடைந்த ஹிந்து, சீக்கிய, சமண, புத்த, பார்சி, கிறிஸ்தவ சமூகங்களை சேர்ந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை கிடைக்க வழி வகுக்கும்..

இந்நிலையில், குடியுரிமை திருத்தச்சட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 14 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: பாதுகாப்பு கொடுத்த போலீசாருக்கு மிரட்டல்? குறுக்கே வந்த பெண் காவலர்.. சவுக்கு சங்கருக்கு இனி திருச்சிதான் கதி..!

அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்த சீக்கியர்கள், ஹிந்துகள் உள்ளிட்ட 14 பேருக்கு குடியுரிமை கிடைத்துள்ளது. 14 பேருக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா இந்திய குடியுரிமைக்கான ஆணையை வழங்கினார்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 338

    0

    0