ஒரு முறை ஏமாற்றப்படலாம்.. மீண்டும் மீண்டும் முடியாது : BJP மீது கேரள முதலமைச்சர் அட்டாக்.!!

Author: Udayachandran RadhaKrishnan
17 April 2024, 5:05 pm

ஒரு முறை ஏமாற்றப்படலாம்.. மீண்டும் மீண்டும் முடியாது : BJP மீது கேரள முதலமைச்சர் அட்டாக்.!!

கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வருகிற 26-ந்தேதி பாராளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, பட்டம்பியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் பாஜக மற்றும் காங்கிரசை குற்றம்சாட்டி பேசினார்.

அவர் கூறியதாவது:-பிரதமர் நரேந்திர மோடி இங்கு வந்து பல வாக்குறுதிகளை அளித்தார். இதை யாராவது நம்புவார்களா? வாக்குறுதிகளை மக்கள் நம்ப மாட்டார்கள்.

“மக்கள் ஒரு முறை ஏமாற்றப்படலாம், ஆனால் மீண்டும் மீண்டும் ஏமாற்ற முடியாது”. மத்தியில் உள்ள பாஜக அரசு நாட்டில் ஆர்எஸ்எஸ் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

மேலும் படிக்க: உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது.. CM ஸ்டாலின் ஐயா தான் காரணம்…அண்ணாமலை!

பாஜக தேர்தல் அறிக்கையில் சிஏஏ குறித்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் மீண்டும் மௌனம் காத்து வருகிறது என்றார். பினராயி விஜயனின் கட்சியான கம்யூனிஸ்டும் மற்றும் காங்கிரசும் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. ஆனால் கேரள மாநிலத்தில் இரு கட்சிகளும் எதிர்எதிரே களம் காண்கின்றன.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!
  • Close menu