நீட் தேர்வை ரத்து செய்யுங்க.. பாஜகவுக்கு திடீர் ட்விஸ்ட் கொடுத்த கூட்டணி கட்சி : NDA கூட்டணியில் பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
8 June 2024, 8:07 pm

நீட் தோ்வு நாடு முழுவதும் கடந்த மாதம் 5-ந்தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கான முடிவுகள் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த 4ம் தேதி வெளியிடப்பட்டது. அப்படி வெளியிடப்பட்ட முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக எழுந்துள்ளது.

குறிப்பாக ஒரே பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 6 மாணவர்கள் முழுமையான மதிப்பெண்கள் பெற்று இருப்பதும், சில மாணவர்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் இல்லாமல் முழுமையான மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை உரிய விளக்கம் தராமல் இருப்பதும் அரசியல் ரீதியாக கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது. குறிப்பாக நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து இதற்கு எதிர்வினை கடுமையாக எழுந்தது

இந்த நிலையில் கடந்த 4ஆம் தேதி வெளியான முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மத்திய அரசுக்கு மராட்டிய மாநில அரசு அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பி உள்ளது. தற்போது மராட்டியத்தில் பா.ஜ.க. மற்றும் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) கூட்டணி அரசு ஆட்சி செய்து வருகிறது என்பது குறிப்படத்தக்கது.

பல்வேறு மாநிலங்களில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணியில் அல்லாத அரசுகள் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தற்போது கூட்டணி கட்சி ஆட்சியில் இருக்கும் மாநிலத்திலிருந்தும் எதிர்ப்பு கிளம்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: இன்ஸ்பெக்டரிடம் LINK க்ளிக் மூலம் மோசடி.. வங்கி கணக்கில் ரூ.2.20 லட்சம் அபேஸ் : இளையதள கேடிகளுக்கு வலை.!!

நீட் தேர்வு முடிவுகளில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் காரணமாக மகாராஷ்டிரா மாநில மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படக்கூடிய அபாயம் இருப்பதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் ஹசன் முஷ்ரிப் தெரிவித்துள்ளார்.

  • Ajith screamed after Vijay's dialogue.. INTERVAL scene from GOOD BAD UGLY leaked விஜய் பட வசனத்தை வைத்து அலறவிட்ட அஜித்.. GOOD BAD UGLY படத்தை கொண்டாடும் ரசிகர்கள்!!