தேர்தல் பத்திர திட்டம் ரத்து… உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு : முக்கிய அரசியல் கட்சிகளுக்கு பின்னடைவு?

Author: Udayachandran RadhaKrishnan
15 February 2024, 11:37 am

தேர்தல் பத்திர திட்டம் ரத்து… உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு : முக்கிய அரசியல் கட்சிகளுக்கு பின்னடைவு?

தேர்தல் பத்திரத்தை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பு வழங்கி உள்ளனர். தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஒருமித்த தீர்ப்பு வழங்கி உள்ளது.

கடந்த 2018ம் தேதி பிப்ரவரி மாதம் இந்த தேர்தல் பத்திரங்கள் திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. தேர்தல் பத்திரங்கள் என்பது தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்தாமல், அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்க அனுமதிக்கும் திட்டம் ஆகும். இத்திட்டத்தின் விதிகளின்படி, இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் அல்லது நாட்டில் இணைக்கப்பட்ட அல்லது நிறுவப்பட்ட எந்த நிறுவனமும் தேர்தல் பத்திரங்களை வாங்கலாம்.

இந்த பத்திரங்கள் ₹ 1,000 முதல் ₹ 1 கோடி வரையிலான பல்வேறு மதிப்புகளில் கிடைக்கின்றன, மேலும் பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) அனைத்து கிளைகளிலும் பெறலாம். இந்த நன்கொடைகளுக்கு வட்டியும் இல்லை.

இந்த பத்திரங்களை பெயரை வெளிப்படுத்தாமல் எந்த கட்சிக்கும் கொடுக்கலாம். இதன் மூலம் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளை அரசியல் கட்சிகள் பெற்றால் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க தேவை இல்லை என மாற்றிவிட்டது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தன.

இந்த வழக்கை தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பிஆர் கவாய், ஜேபி பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் விசாரித்து கடந்த நவம்பர் மாதம் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தனர். இன்று தீர்ப்பு: இந்த வழக்கில்தான் இன்று தேர்தல் பத்திரங்கள் திட்டம் ரத்து என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. லோக்சபா தேர்தல் நேரத்தில் வழங்கப்பட்டு இருக்கும் இந்த தீர்ப்பு பாஜகவிற்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

அதன்படி தேர்தல் பத்திரங்கள் திட்டம் அரசியல் சட்டத்திற்கு புறம்பானவை நன்கொடை வழங்குவது என்பது அரசியல் கட்சியிடம் ஆதாயத்தை எதிர்பார்த்து செய்வது தற்போதுள்ள சட்டங்கள், தேர்தல் நிதியை கார்ப்பரேட், தனி நபர்கள் மூலம் பெற வழிவகுக்கிறது என்று தேர்தல் பத்திரங்களுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

லோக்சபா தேர்தல் நேரத்தில் வழங்கப்பட்டு இருக்கும் இந்த தீர்ப்பு பாஜகவிற்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் பிடிஐ அறிக்கையின்படி, 2022-23 நிதியாண்டில், பாஜக கிட்டத்தட்ட ₹ 1,300 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளது, அதே காலகட்டத்தில் காங்கிரஸுடன் ஒப்பிடும்போது இது ஏழு மடங்கு அதிக நிதி ஆகும். இந்த ஆண்டிற்கான பாஜக பெற்ற ஒட்டுமொத்த நிதி ₹ 2,120 கோடியாகும், தேர்தல் பத்திரங்களில் மொத்தத்தில் 61 சதவீதம் பாஜகவிற்கு சென்றுள்ளது. முந்தைய 2021-22 நிதியாண்டில், பாஜக பெற்ற ஒட்டுமொத்த நிதி ₹ 1,775 கோடி.

2022-23 ஆம் ஆண்டிற்கான பாஜக பெற்ற ஒட்டுமொத்த நிதி ₹ 2,360.8 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நேர்மாறாக, தேர்தல் பத்திரங்கள் மூலம் வருவாயில் சரிவைச் சந்தித்து உள்ளது காங்கிரஸ். 2022-23ல் ₹ 171 கோடியை மட்டுமே காங்கிரஸ் ஈட்டியது. இது 2021-22 நிதியாண்டில் பெற்ற ₹ 236 கோடியிலிருந்து குறைந்துள்ளது. பாஜகவிற்கு தொடர்ந்து சாதகமாக இருந்த இந்த திட்டத்தை தற்போது உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

  • Rajkumar Periyasamy Pan-India Film ஒரே படம் ஓஹோ-னு வாழ்க்கை…பாலிவுட்டில் களம் இறங்கிய அமரன் பட இயக்குனர்..!
  • Views: - 240

    0

    0