தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது.. காவிரி ஒழுங்காற்று வாரியம் உத்தரவிட்டும் கர்நாடகா பிடிவாதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 July 2024, 7:51 pm

காவிரி ஒழுங்காற்று வாரியத்தின் 99வது ஆலோசனை கூட்டம் அக்குழுத் தலைவர் நவீன் குப்தா தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், கடந்த ஆண்டு ஜூன் முதல் கர்நாடகா அரசு காவிரியில் இருந்து 175 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆனால், 79 டிஎம்சி தண்ணீர் தான் இதுவரை கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளது.

இன்னும் 97 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டியுள்ளது. என கூறி இம்மாதம் 40 டிஎம்சி தண்ணீர் திறக்க கோரிக்கை வைத்தனர். இதனை அடுத்து, காவிரி ஒழுங்காற்று வாரியம் , இன்னும் ஒரு மாத காலத்திற்கு கர்நாடக அரசு தினம் ஒரு டிஎம்சி அளவு தண்ணீரை காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என உத்தரவிட்டது.

இதனை அடுத்து, கர்நாடக முதல்வர் சித்தராமையா, அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டம் நிறைவுபெற்ற பின்னர் சித்தராமையா செய்தியாளர்களிடம் பேசுகையில், காவிரி நீர் பாசன பகுத்திகளில் 28 சதவீதம் அளவுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லை. கர்நாடகாவின் வலியுறுத்தலை மீறி காவிரி ஒழுங்கற்று வாரியம் பரிந்துரை செய்துள்ளது.

தற்போது தமிழகதிற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட முடியாது. காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சியினரும் ஒற்றுமையாக இருக்கிறோம். வரும் 14ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!