சொகுசு காரில் இருந்து திடீரென வெளியேறிய புகை… உதவிக்கு வந்தவர்களுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி ; போலீசார் விசாரணையில் பகீர்!!

Author: Babu Lakshmanan
25 November 2023, 7:57 pm

தெலங்கானாவில் தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு விநியோகிக்க எடுத்துச் செல்லப்பட்டதாக சொல்லப்படும் ரூபாய் நோட்டுகள் தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் வரும் 30ம் தேதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி, அங்கு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்து வருகின்றன. இந்த சூழலில் வாரங்கல் மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த காரின் பேனட்டில் திடீரென புகை கிளம்பியுள்ளது. இதனால், காரில் வந்த இரு இளைஞர்கள், காரை ஓரமாக நிறுத்தி, பேனட்டின் மீது தண்ணீரை ஊற்றிக் கொண்டிருந்தனர்.

இதனை கவனித்த அக்கம்பக்கத்தினர், பேனட்டின் உள்ளே தண்ணீரை ஊற்றுமாறு சொல்லி, பெரிய கேனில் தண்ணீரை எடுத்து வந்தனர். இதனை செய்ய அவர்கள் மறுத்தாலும், தண்ணீரை ஊற்றுமாறு கூறியுள்ளனர். வேறு வழியின்றி பேனட்டை திறந்த போது, அதில் கட்டு கட்டாக பாதி எரிந்த நிலையில், ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, கூட்டமாக திரண்டு வந்து அந்த நோட்டுகளை அங்கிருந்தவர்கள் எடுத்தச் சென்றனர். அவர்களை தடுக்க முடியாத இளைஞர்கள் அங்கிருந்து காரை அங்கேயே விட்டு விட்டு நைசாக கிளம்பினர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் எரிந்த நிலையில் இருந்த ரூ.2.50 லட்சத்தை மீட்டு விசாரித்து வருகின்றனர்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 327

    0

    0