காளஹஸ்தி தரிசனம் முடிந்து ஈரோடு திரும்பிய போது சோகம் : கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளாகி 12 வயது சிறுவன் மற்றும் பெண் பலி..!!

Author: Udayachandran RadhaKrishnan
10 July 2022, 2:10 pm

திருப்பதி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் ஈரோட்டை சேர்ந்த 12 வயது சிறுவன் உட்பட இரண்டு பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோட்டை சேர்ந்த வினோத் என்பவர் குடும்பத்துடன் நேற்று குடும்பத்துடன் காளஹஸ்திக்கு வந்து சாமி கும்பிட்ட பின் சொந்த ஊருக்கு செல்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தார்.

அந்த கார் திருப்பதி சமீபத்தில் இருக்கும் மலலாவரம் அருகே சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு மீது மோதியது. இந்த விபத்தில் காரில் பயணித்த 30 வயது சரண்யா மற்றும் 12 வயது மிதுன் ஆகியோர் பரிதாபமாக மரணமடைந்தனர்.

வினோத் மற்றும் அவருடைய தாய் தந்தையர் ஆகியோர் காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்து பற்றிய தகவல் அறிந்த ஏற்பேடு போலீசார் விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மரணம் அடைந்த இரண்டு பேரின் உடல்களும் திருப்பதி அரசு மருத்துவமனை சவக்கிடங்கிள் வைக்கப்பட்டுள்ளன.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!