லாரியுடன் ஆட்டோ நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. 9 பேர் உயிரிழப்பு : பிரதமர் மோடி போட்ட பரபரப்பு ட்வீட்!
Author: Udayachandran RadhaKrishnan21 February 2024, 7:42 pm
லாரியுடன் டெம்போ நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. 9 பேர் உயிரிழப்பு : பிரதமர் மோடி போட்ட பரபரப்பு ட்வீட்!
லக்கிசராய்-சிகந்திரா பிரதான சாலையில் உள்ள பிஹராவுரா கிராமத்தில், இன்று அதிகாலை 3 மணியளவில் லாரியும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், திருமண விழாவில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த ஆட்டோவில் குறைந்தது ஒன்பது பேர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர்.
உயிரிழந்தவர்களில் வீர் பாஸ்வான், விகாஸ் குமார், விஜய் குமார், திபானா பாஸ்வான், அமித் குமார், மோனு குமார், கிசான் குமார் மற்றும் மனோஜ் கோஸ்வாமி என கண்டறியப்பட்டுள்ளது. போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
இந்த நிலையில் விபத்து குறித்து பிரதமர் மோடி தனது X தளபக்கத்தில், பீகார் மாநிலம் லக்கிசராய் பகுதியில் நடந்த சாலை விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்துடன், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய விரும்புகிறேன். மாநில அரசாங்கத்தின் மேற்பார்வையின் கீழ், உள்ளூர் நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதில் ஈடுபட்டுள்ளது என பதிவிட்டுள்ளார்.