லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து : காரில் உள்ள பெட்ரோல் டேங்க் வெடித்து 3 பேர் உடல் கருகி பலியான பரிதாபம்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 May 2022, 10:37 pm

ஆந்திரா : லாரி மீது கார் மோதிய விபத்தில் கார் பெட்ரோல் டேங்க் வெடித்து காரில் பயணித்த 3 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் மார்க்கபுரம் மண்டலம் திப்பையா பாளையம் கிராமம் சமீபத்தில் லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்து ஏற்பட்டவுடன் காரின் பெட்ரோல் டேங்க் வெடித்து கார் தீப்பற்றி எரிந்தது.

தீ விபத்து குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.

ஆனால் அதற்குள் கார் தீப்பற்றி எரிந்ததில் காரில் பயணித்த 3 பேர் உடல் கருகி பரிதாபமாக நிகழ்விடத்திலேயே மரணம் அடைந்தனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காரில் இருந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Ajith Vidamuyarchi Trailer Release Update விடாமுயற்சி ட்ரைலர் ரெடி : அப்போ ரிலீஸ் தேதி…இருங்க பாய்..நாளைக்கு ஒரு வெயிட்டான சம்பவம் இருக்கு..!