முட்டி மோதிய கார்… தூக்கி வீசப்பட்ட பைக்… வாகன ஓட்டிகளை மிரள வைத்த சம்பவம் (வீடியோ)

Author: Babu Lakshmanan
6 June 2022, 5:10 pm

பைக்கில் சென்றவரை கார் ஓட்டுநர் ஒருவர், காரில் இடித்து தள்ளும் சம்பவம் குறித்த அதிர்ச்சி காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இப்போது எல்லாம் நாட்டில் நடக்கும் அனைத்து முக்கிய விஷயங்களும் சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்யப்படுகிறது. எந்த மூலை முடுக்கில் ஏதேனும் நடந்தாலும், அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டால், அது வைரலாகுவது வழக்கமான ஒன்றாக மாறி விட்டது.

அந்த வகையில், தற்போது சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டுவிட்டர் பயனாளி ஒருவர், “எங்களில் சிலரை கார் ஏற்றி கொலை செய்யும் வகையில் கார் ஓட்டுநர் ஒருவர் நடந்து கொண்டுள்ளார்,” எனப் பதிவிட்டு, அதோடு வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஸ்கார்பியோ கார் ஓட்டுநர், பைக்கில் செல்பவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், பின்னர், பைக்கில் சென்றவரை காரில் இடித்து தள்ளும் காட்சி அதில் இடம்பெற்றுளளது.

இந்த வீடியோ வைரலான நிலையில் அந்த நபரின் இந்தப் பதிவிற்கு டெல்லி காவல்துறை பதில் பதிவு செய்துள்ளது. அதில் எங்களுக்கு உங்களுடைய விவரங்களை கொடுங்கள் நாங்கள் தொடர்பு கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கார் ஓட்டுநர் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?
  • Close menu