மலைப்பாதையில் 100 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து தலைமை ஆசிரியர் பலி : பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!!
Author: Udayachandran RadhaKrishnan17 April 2023, 4:25 pm
மலைப்பாதையில் கிடு, கிடு பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி தலைமை ஆசிரியர் உயிரிழந்தார்.
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள தேவரகொண்ட மலை மீது சிவன் கோவில் ஒன்று உள்ளது. அந்த கோவிலுக்கு அனந்தபுரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியர் உமாபதி சாமி கும்பிடுவதற்காக சென்று இருந்தார்.
சாமி கும்பிட்டு திரும்பும் போது அவருடைய கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து வேகமாக ஓடி கிடு கிடு பள்ளத்தில் கவிழ்ந்து நொறுங்கியது.
மலைப்பாதையின் மேல் பகுதியில் இருக்கும் சாலையில் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் இறங்கிய கார் சுமார் நூறு அடிக்கு கீழ் இருக்கும் சாலை மீது விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் தலைமை ஆசிரியர் உமாபதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மரணமடைந்தார். விபத்து பற்றிய தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த போலீசார் கார் கவிழ்ந்த போது பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
மரணம் அடைந்த பள்ளி தலைமை ஆசிரியர் உமாபதி உடல் அனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
0
0