கார் டயர் வெடித்து பாஜக பெண் பிரமுகர் பரிதாப பலி… ஐதராபாத் அருகே நடந்த பயங்கர விபத்து!!

Author: Udayachandran RadhaKrishnan
17 April 2023, 6:26 pm

52 வயதான நீரஜா ரெட்டி, தெலங்கானாவின் ஐதராபாத்திலிருந்து கர்னூலுக்கு நேற்று காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பீச்சுப்பள்ளி என்ற பகுதி வழியாக சென்ற போது டயர் வெடித்ததால் காரின் கட்டுப்பாடு செயல்படாமல் போயிருக்கிறது.

இதனால் கார் சாலையோரம் அடித்துச் செல்லப்பட்டதால் பலத்த காயமடைந்த நீரஜா ரெட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆனால் காரை ஓட்டி வந்த டிரைவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார் என கொண்டாண்டபுரம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

அலூர் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கடந்த 2009ம் ஆண்டு போட்டியிட்டு எம்.எல்.ஏவாக பதவி வகித்து வந்த இந்த நீரஜா ரெட்டி, 2019ம் ஆண்டு ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

அதன் பின்னர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த நீரஜா, கர்னூலின் அலூர் பகுதியின் பொறுப்பாளராகவும், மாநில செயற்குழு உறுப்பினராகவும் அக்கட்சியில் பதவி வகித்து வந்தார்.

நீரஜாவின் கணவரும் பதிகொண்டா சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்தவர் என்பதும், அவர் கடந்த 1996ம் ஆண்டு கலவரத்தின் போது கொல்லப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…