ராஜமுந்திரி அருகே தடம் புரண்டு சரக்கு ரயில் கவிழ்ந்து விபத்து : 9 ரயில்கள் தற்காலிகமாக ரத்து…!!

Author: Udayachandran RadhaKrishnan
9 November 2022, 12:36 pm

விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடா வழியாக சென்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் ஒரு பெட்டி இன்று அதிகாலை ராஜமுந்திரி அருகே உள்ள பாலாஜி பேட்டை அருகே மேம்பாலத்தின் கீழ் தடம் புரண்டது.

இதனால் அந்த வழித்தடத்தில் தற்போது ஒரு பாதையில் மட்டுமே ரயில் போக்குவரத்து நடைபெறுகிறது. இதன் காரணமாக ரயில்வே நிர்வாகம் ஒன்பது ரயில்களின் போக்குவரத்தை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

தடம் புரண்ட சரக்கு ரயிலின் போகியை நிறுத்தி போக்குவரத்தை சரி செய்யும் முயற்சியில் ரயில்வே அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

  • Nayanthara Test movie news சிம்பு பிறந்த நாளுக்கு நயன்தாரா எடுக்க போகும் திடீர் முடிவு…ரசிகர்களுக்கு செம ட்விஸ்ட்..!