இந்திய கரன்சி இல்லாமல் தவித்த இளம்பெண் கரோலினா : உதவி செய்வது போல உல்லாசத்திற்கு அழைப்பு.. நண்பனுடன் கைதான இளைஞர்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 March 2022, 2:33 pm

ஆந்திரா : மாநிலம் நெல்லூர் அருகே மகிளா தினம் என்று வெளிநாட்டு பெண்ணிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

லித்துவேனியா நாட்டை சேர்ந்த கரோலினா என்பவர் லித்துவேனியாவிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம் பேருந்தில் பெங்களூர் புறப்பட்டு சென்றார். அப்போது அவரிடம் இந்திய பணம் இல்லாத நிலையில் டாலர்களில் டிக்கெட் கட்டணத்தை செலுத்த முயன்றார்.

பேருந்து நடத்துனர் அவர் கொடுத்த வெளிநாட்டு பணத்தை வாங்க மறுத்து விட்டார்.அப்போது அதே பேருந்தில் பயணித்த நெல்லூரை சேர்ந்த சாய்குமார் என்பவர் கரோலினாவுக்கு உதவும் வகையில் டிக்கெட் எடுக்க பணம் கொடுத்தார்.

இரண்டு பேரும் பெங்களூர் சென்ற நிலையில் அங்கு சாய்குமார் வாகன உதிரிபாகங்களை கொள்முதல் செய்தார். தேவையான அளவு பணம் இல்லாத நிலையில் கரோலினா அவருக்கு தன்னுடைய கணக்கிலிருந்து ஏடிஎம் மூலம் 5 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்து கொடுத்தார்.

பின்னர் என்னுடைய ஊருக்கு வந்தால் இந்த பணத்தை திருப்பிக் கொடுக்கிறேன் என்று கூறி கரோலினாவை நெல்லூர் அருகே உள்ள தன்னுடைய சொந்த ஊருக்கு சாய்குமார் அழைத்து வந்தார்.

நேற்று காலை சாய்குமார் வீட்டில் கரோலினா குளித்து, உடை மாற்றிக் கொண்ட பின் அவரை பெங்களூரில் வழியாக கோவாவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்கிறேன் என்று கூறி தன்னுடைய மோட்டார் சைக்கிளில் சாய்குமார் அழைத்து சென்றார்.

இந்த நிலையில் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள சாய்தாபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது தன்னுடைய நண்பர் சையத் என்பவருக்கு போன் செய்து அவரை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு சாய்குமார் வரவழைத்தார்.

சாய்தாபுரம்,ராப்பூர் இடையே கரோலினாவை மோட்டார் சைக்கிளில் இருந்து இறக்கிய இரண்டு பேரும் அவரை தூக்கி சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது கரோலினா போட்ட சத்தத்தை கேட்டு அந்த வழியாக சென்று கொண்டிருந்தவர்கள் விரைந்து சென்று அவரை காப்பாற்றினர்.

இதுபற்றி கரோலினா அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சில்லகூறு அருகே சாய்குமார்,சையத் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.

மகளிர் தினம் அன்று வெளிநாட்டு இளம்பெண் ஒருவரிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயன்ற இரண்டு பேரையும் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பல்வேறு தரப்புகளில் இருந்தும் ஏற்பட்டுள்ளன.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி